2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - தனுசு

2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - தனுசு

தாராள மனமும், தியாக குணமும் கொண்ட தனுசு ராசி வாசகர்களே!
 
எதிர் வரும் 01-05-2024 முதல் இதுவரை பஞ்சமஸ்தானத்தில் இருந்த குரு, இனி ஆறாமிடமான ருண சத்ரு ஸ்தானத்தில் அமர்கிறார். உங்களின் ராசிநாதன் என்பதால் ஆறாமிடமாக இருந்தாலும் உங்களின் மேல் அக்கறை கொள்வார்.
 
குரு பார்வை பெறும் இடமான தனஸ்தானத்திலும், தொழில் ஸ்தானத்திலும், விரையஸ்தானத்திலும் குருவின் பார்வை இருப்பதால்... குடும்பத்தில் பல காலம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள். இனி எதையும் சிறப்பான வளர்ச்சியைப் பெறுவதற்கு சில முக்கியத்துவம் அளிப்பீர்கள். தனஸ்தானாதிபதி சனி உங்களின் முயற்சிகளுக்கு பக்க பலமாக யோக சனியாக இருப்பதால் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும்.
 
குறுகிய காலத்தில் உங்களின் எண்ணம் நிறைவேறும். சிலருக்கு தேவைகளுக்கான பொருளாதார மேன்மை உண்டாகும். தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால்.. செய்யும் தொழிலை விருத்தி செய்து கொள்ளவும். புதிய தொழிலில் முதலீடு செய்யவும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றமும், பதவி உயர்வு போன்ற விடயங்களால் கௌரவிக்கப்படுவீர்கள். செய்யும் தொழிலில் உண்மையும், நேர்மையும் கொண்டு விளங்குவீர்கள்.
 
காரியத்தில் கவனமும், செயலில் முன்னெச்சரிக்கையும் கொண்டு விளங்குவீர்கள். முக்கிய பிரமுகரின் சந்திப்பு உங்களுக்கு நன்மையை பெற்றுத் தரும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் சிலருக்கு அமையும். விருப்பமற்ற வேலையில் இருப்பவருக்கு.. இதைவிட வேறு பணிக்கு சென்று பொருளாதாரம் ஈட்டும் வாய்ப்பு அமையும். 
 
சுப விரையங்கள் உண்டாகும். காலிமனை வாங்குவதற்கு உகந்த நேரமாக அமையும். தொழில் அமையாதவர்களுக்கு நல்ல தொழில் அமையும். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
 
பரிகாரம்:
 
வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு ஆறு நெய் தீபமேற்றி, மஞ்சள் தூள் அர்ச்சனை செய்து, வேண்டிக் கொள்ள.. சகல காரியமும் நினைத்தபடி சிறப்பாக அமையும்.